Thevaram Trip Tamilnadu - Avudayar koil, Sirkazhi, Thiruvennainallur, Thiruvathigai Veerattanam, Uthirakosa mangai, Rameswaram, Kalayar koil, etc - April 2023
ராமேஸ்வரம் மற்றும் இதர திருத்தலங்கள் பயண கட்டுரை சத்தியமூர்த்தி சென்னை --- vsathyamurthy@gmail.com இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை 8 ஏப்ரல் முதல் 15 ஏப்ரல் வரை, 2023 _______________________________________ எனக்கு பல வருடங்களாகவே ஒரு ஆசை உண்டு தேவார நால்வர் / சைவ நால்வர் / சைவக் குரவர்கள் , முதலில் ஞானம் பெற்ற திருத்தலங்களை சென்று தரிசிக்க வேண்டும் . அந்த விருப்பத்தின்படி இந்தப் பயணம் வடிவமைக்கப்பட்டது சைவக் குரவர்கள் வரிசைப்படி ; திருஞானசம்பந்தர் அப்பர் என்கிற திருநாவுக்கரசர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாணிக்கவாசகர் தேவாரத்தின் பெரும் பகுதி இவர்கள் எழுதியது சைவ சித்தாந்தம் தமிழகத்தில் தழைத்து ஓங்க பெரும் பணியாற்றியவர்கள் இவர்கள் முறையே இறைவனிடம் ஞானம் பெற்ற கோவில்கள் திருஞானசம்பந்தர் சீர்காழி அப்பர் திருவதிகை வீராட்டானம் சுந்தரமூர...