Thevaram Trip Tamilnadu - Avudayar koil, Sirkazhi, Thiruvennainallur, Thiruvathigai Veerattanam, Uthirakosa mangai, Rameswaram, Kalayar koil, etc - April 2023
ராமேஸ்வரம் மற்றும் இதர திருத்தலங்கள் பயண கட்டுரை
சத்தியமூர்த்தி சென்னை --- vsathyamurthy@gmail.com
இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை
8 ஏப்ரல் முதல் 15 ஏப்ரல் வரை, 2023
_______________________________________
எனக்கு பல
வருடங்களாகவே ஒரு
ஆசை உண்டு
தேவார நால்வர்
/ சைவ
நால்வர் / சைவக்
குரவர்கள் ,முதலில்
ஞானம் பெற்ற
திருத்தலங்களை சென்று
தரிசிக்க வேண்டும்.
அந்த விருப்பத்தின்படி
இந்தப் பயணம்
வடிவமைக்கப்பட்டது
சைவக் குரவர்கள்
வரிசைப்படி;
திருஞானசம்பந்தர்
அப்பர் என்கிற
திருநாவுக்கரசர்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
மாணிக்கவாசகர்
தேவாரத்தின் பெரும்
பகுதி இவர்கள்
எழுதியது
சைவ சித்தாந்தம்
தமிழகத்தில் தழைத்து
ஓங்க பெரும்
பணியாற்றியவர்கள்
இவர்கள் முறையே
இறைவனிடம் ஞானம்
பெற்ற கோவில்கள்
திருஞானசம்பந்தர் சீர்காழி
அப்பர் திருவதிகை
வீராட்டானம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருவெண்ணைநல்லூர்
மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை
.
08 ஏப்ரல் 2023
திருவானைக்காவல் திருச்சி மாவட்டம்
திருவானைக்காவல் சிவஸ்தலம் , திருச்சி அருகில் ஜம்புகேஸ்வரர் அப்பூஸ்தலம். அதாவது பஞ்சபூதங்களில் நீர்.
அகிலாண்டேஸ்வரி அம்மன்
பிரதானம்
மிகப் பழமையான
ஒரு ஆலயம்
, பிரமாதமான
சிற்ப வேலைப்பாடுகளும்
மண்டபங்களும் உடையது.
இங்கு கிடைக்கும்
பிரசாதம் மிகவும்
அருமையாக இருக்கும்.
குறிப்பாக சர்க்கரை
பொங்கல் புளியோதரை
மற்றும் மிளகு
வடை.
Stay at Sivaganga.
9 ஏப்ரல்
2023
1. காளையார் கோவில் சிவகங்கை மாவட்டம்
அற்புதமான சிவஸ்தலம்; சிவன் இங்கு மூன்று விதமாக அருள் பாவிக்கிறார் அதேபோல் 3 அம்மன் 3 பைரவர் 3 பள்ளியறை.
இத்தலத்தில் மூன்று
இறைவனும், மூன்று
இறைவியும் எழுந்தருளுகின்றனர்.
சொர்ணகாளீஸ்வரர் - சொர்ணவல்லி
சோமேசர் - சவுந்தரநாயகி
சுந்தரேசுவரர் - மீனாட்சி
சரித்திர புகழ்
பெற்ற இந்த
ஆலயம் மருது
சகோதரர்கள் வாழ்க்கையில்
மிக முக்கியமானது
இந்திய சுதந்திரப்
போராட்டத்தில் மிக
முக்கிய பங்கு
வகித்தது இந்த
ஆலயம்.
பிரம்மாண்டமான ஆலயம்
பிரம்மாண்டமான தெப்பக்குளம்.
கோவிலுக்கு எதிரில்
உள்ள மருது
சகோதரர் ஆலயத்தையும்
பார்ப்பது நலம்
சுமார் 100 மீட்டர்
தொலைவில் இருக்கும்.
இதுதான் பெரிய
மருதுவின்
வெட்டிய தலை
அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
2. உத்திரகோசமங்கை ராமநாதபுரம் மாவட்டம்
இறைவர் திருப்பெயர்:
மங்களேசுவரர்,
மங்களநாதர், காட்சிகொடுத்தநாயகர்,
பிரளயாகேசுவரர்.
இறைவியார் திருப்பெயர்:
மங்களேசுவரி, மங்களாம்பிகை,
சுந்தரநாயகி.
உத்தரம் - உபதேசம்;
கோசம் - ரகசியம்;
மங்கை - பார்வதி.
பார்வதி தேவிக்கு
இறைவன் வேதாகமங்களின்
ரகசியங்களை உபதேசித்தமையால்
இத்தலம் உத்தரகோசமங்கை
என்னும் பெயர்
பெற்றது.
இங்குள்ள கூத்தப்பிரான்
- நடராசர்
அதி அற்புதமானவர்.
ஐந்தரை அடி
உயரம் - முழுவதும்
மரகதத் திருமேனி.
விலை மதிப்பிட
முடியாத இப்பெருமான்
ஆண்டு முழுவதும்
சந்தனக் காப்பிலேயே
அடியவர்க்குக் காட்சியளிக்கிறார்.
இங்குள்ள சபை
இரத்தினசபை எனப்படுகிறது.
தமிழ்நாட்டில் சிவ
ஸ்தலங்களில் மிகப்
பழமையான சிவஸ்தலம்
உத்தரகோசமங்கை
Stay at Rameswaram
10 ஏப்ரல் 2023
ராமேஸ்வரம்
1. பாம்பன் பாலம்
ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும்போது பாம்பன் பாலம் ஒரு அருமையான போட்டோ எடுக்கும் இடம். அருமையான ஒரு படைப்பு இந்த பாம்பன் பாலம். இதன் தொழில்நுட்பங்கள் வியக்க வைக்கும் இங்குள்ள ரயில் பாலம் இரண்டாகப் பிரிந்து கப்பல்களுக்கு வழி விடும்.
2. குரு சடை ஐலண்ட்
இது ஒரு பொழுதுபோக்கு இடம் தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமானது அவர்களால் பராமரிக்கப்படுகிறது 24 தீவுகளில் இந்த ஒரு தீவுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல அனுமதி.
ராமேஸ்வரத்தில் இருந்து
படகு வசதி
உள்ளது தலைக்கு
300 ரூபாய்
டிக்கெட்.
மொத்தமாக மூன்று
மணி நேரம்
ஆகும் ஆனால்
அருமையான ஒரு
இடம். கடல்
உயிரினங்கள் கடல்
தாவரங்கள் இவைகளைப்
பற்றி வனத்துறை
அதிகாரி நமக்கு
விளக்குவார்.
Must see picnic spot at Rameswaram.
3. விவேகானந்தா மெமோரியல்
ஸ்ரீ ராமகிருஷ்ணர் தபோவனம்
திருப்பராய்த்துறை அவர்களால்
பராமரிக்கப்படுகிறது அருமையான
ஒரு மண்டபம்
பெரிய விவேகானந்தர்
சிலை உள்ளது
மற்றும் ராமநாதபுரம்
சமஸ்தான ராஜா
சிலையும் உள்ளது.
நிறைய பேருக்கு
தெரிந்த ஒரு
விஷயம் சுவாமி
விவேகானந்தர் அமெரிக்காவில்
ஆற்றிய உரை.
நிறைய பேருக்கு
தெரியாத ஒரு
விஷயம்.
அதற்கு நிதி
உதவி செய்தவர்
ராமநாதபுரம் சமஸ்தான
ராஜா. சரித்திரத்தில்
இடம் பிடிக்க
வேண்டிய இந்த
நிகழ்வு ஏன்
இடம் பிடிக்கவில்லை
என்பது கேள்விக்குறி??
4. ராமநாதசுவாமி திருக்கோவில்
ராமர் வழிபட்ட
ஸ்தலம். பித்ருக்களுக்கு
காரியங்கள் தர்ப்பணம்
செய்யும் இடம்
21 (or 22) தீர்த்தங்கள்
உள்ளன குளிக்க
விருப்பம் உள்ளவர்கள்
குளிக்கலாம்
பிரம்மாண்டமான பிரகாரங்கள்
அருமையான சிற்பங்கள்
வேலைப்பாடுகள் உள்ள
ஒரு ஆலயம்.
மாலை நேரத்தில்
சென்றால் சுலபமாக
தரிசனம் செய்யலாம்.
காலை நேரத்தில்
கூட்டம் அதிகமாக
இருக்கும். இது
பொதுவாக எல்லா
பெரிய கோவில்களுக்கும்
பொருந்தும்.
தனிமனிதர்களுக்கு இங்கு
ஹோட்டல் ரூம்
கிடைப்பது கடினம்
It's difficult for bachelors to get a hotel room at
Rameshwaram
Stay at rameshwaram
11 ஏப்ரல் 2023
1.
தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை
இந்து மகா சமுத்திரம் மற்றும் வங்காள விரிகுடா ஒன்றாக கலக்கும் சங்கமம் அரிச்சல் முனை.
காண கண் கொள்ளாக் காட்சி. இயற்கை தாண்டவம் ஆடுகிறது
இங்கு பெற்றோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்கள்
காலை 6 மணி வார்த்தை சென்றால் சூரிய உதயத்தை காணலாம்.
2, திருப்புல்லாணி .. ராமநாதபுரம் மாவட்டம்
திருப்புல்லாணி ஆதி
ஜெகநாதர் திருக்கோவில்
பெருமாள் ஆதி
ஜெகநாதர்
தாயார் பத்மாசனி
ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த
கோலம்), சயனராமர்
(கிடந்த
கோலம்), பட்டாபிராமர்
(நின்ற
கோலம்), அரசமர
பெருமாள், பட்டாபிராமர்
என இத்தலத்தில்
மகாவிஷ்ணுவின் ஐந்து
வடிவங்களையும், மூன்று
கோலங்களையும் தரிசிக்கலாம்.
புராணப்படி ராமர்
சீதையை மிக்க
இங்கிருந்து புறப்பட்டுச்
சென்று பின்
இங்கு வந்து
விட்டு சென்றதாக
ஐதீகம்.
மிக அருமையான
ஒரு வைஷ்ணவ
ஸ்தலம்.
Stay at aranthangi
12 ஏப்ரல் 2023
1. திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில் புதுக்கோட்டை மாவட்டம்
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஆத்ம நாதர்
திருக்கோவிலில் மூலவராக
ஆதி அந்தம்
இல்லாத ஆதிசிவன்
ஆத்மநாதராகவும், தாயாரான
பார்வதி யோகாம்பாளாகவும்
காட்சி தருகின்றனர்.
இந்த கோவிலில்
உள்ள சிவபெருமான்,
வடிவம் இல்லாமல்
தலவிருட்சமான குருந்தமர
வடிவில் குடிகொண்டுள்ளார்.
இந்த குருந்தமரம்
வடமேற்கு மூலையில்
அமைந்துள்ளது. இந்த
கோவிலில் சதுர
வடிவ ஆவுடையார்
மட்டுமே கருவறையில்
அமைந்துள்ளது. அதன்
மீது ஒரு
குவளை சாத்தப்பட்டுள்ளது.
அதில் குவளையை
உடலாகவும் அதற்கு
உள்ளே இருப்பது
ஆத்மாவாகவும் கருதப்படுகிறது.
இவ்வாறு உடலுக்குள்
இருக்கும் ஆத்மாவை
காப்பவராக இந்த
ஈசனை ஆத்மநாத
ஈஸ்வரன் என்று
அழைக்கின்றோம். இத்திருக்கோவிலில்
கருவரையில் ஈசன்
அரூபமாகவும், அருவுருவமாக
குருந்த மர
வடிவிலும், உருவமாக
மாணிக்கவாசகர் ரூபத்திலும்
இருக்கின்றனர்.
மாணிக்கவாசகருக்கு சிவனே
ஒரு பெரியவர்
உருவில் வந்து
தடுத்தார் கொண்ட
ஸ்தலம்.
சிற்பங்களும் கலைநயங்களும் ஒன்றாக கலந்து அற்புத ஆனந்த வெள்ளத்தில் மூழ்கு அடிக்கும் ஒரு ஆலயம்
சிவன் அருவமாகவும்
அருவுருவமாகவும் உருவமாகவும்
மூன்று விதமாகவும்
காட்சியளிக்கும் ஒரே
ஸ்தலம்.
இங்கு அம்பாளுக்கு
விக்ரகம் இல்லை
அருவமாகவே இருக்கிறாள்.
அம்மன் பெயர்
யோகாம்பாள்.
இங்கு கடவுளுக்கு
புழுங்கரிசி சாதம்
சுடச்சுட நெய்வேத்தியம்
செய்யப்படுகிறது அதில்
வரும் ஆவி
சிவனுக்கு செலுத்தப்படுகிறது.
எனவே
ஆவுடையார் என்றும்
பெயர் பெற்றது.
இங்குள்ள சிற்பங்களில்
முக்கியமாக காண
வேண்டியது உடம்பும்
குரங்கும் உலகின்
பல்வேறான குதிரைகள்
இசை எழுப்பும்
தூண்கள். இரண்டு
தூண்களில் ஆயிரம்
கால் மண்டபங்கள்.
கல்லாலான சங்கிலிகள்
சிற்பங்களில் உள்ள
நகங்கள் தொட்டுப்
பார்த்தால் உண்மையான
நகங்கள் போலவே
இருக்கும்.
இத்தளத்தின் மற்றும்
ஒரு சிறப்பு
:
இன்றும் கட்டிடம்
கட்டும்பொழுது ஆவுடையார்
கோவில் கொடுங்கை
நீங்களாக என்று
எழுதுவார்கள் இங்கு
கல்லிலேயே கம்பிகளை
கட்டி கோவிலை
சுற்றி அமைத்துள்ளார்கள்.
இது ஒரு
மனிதனால் செய்ய
முடியாத ஒரு
கலை அல்லது
ஒரு வேலை
என்று சொல்வதாம்
ஆகவே கட்டிடம்
கட்டும்பொழுது அந்த
பத்திரத்தில் ஆவுடையார்
கோவில் கொடுங்கை
நீங்கலாக என்று
எழுதி தான்
கையெழுத்து இடுவார்கள்.
கோயிலின் தாழ்வாரத்திலுள்ள
கொடுங்கைகள் கல்லை
தேக்கு மரச்சட்டம்
போல் இழைத்து
அதில் (கம்பிகளை
இணைத்துச் சேர்த்து
அதிலே குமிழ்
ஆணிப்பட்டை ஆணிகள்
அறைந்திருப்பது போல)
எல்லாமே கல்லில்
செய்து அதன்
மீது மெல்லிய
ஓடு வேய்ந்திருப்பது
போல செய்திருப்பது
சிற்பக்கலை வியக்கத்
தக்க ஒப்பற்ற
திறனாகும்.
ஒரு கல்லுக்கும்
மறு கல்லுக்கும்
எப்படி எந்த
இடத்தில் இணை
சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக்
கண்டு பிடிக்க
முடியாத அளவிற்கு
அமைக்கப்பட்டுள்ள இந்தத்
தாழ்வாரம் எனப்படும்
கொடுங்கைக்கூரை ஆனது
மொத்தம் பதிமூன்றரை
அடி நீளமும்
ஐந்தடி அகலமும்
இரண்டரையடி கனமும்
உள்ளதாகும். இந்த
இரண்டரையடி கனத்தை
இப்படி தாழ்வாரக்
கூரையாக்கி செதுக்கிச்
செதுக்கி ஒரு
அங்குல கன்னமுள்ள
மேலோடு அளவிற்குச்
சன்னமாக்கப்பட்டிருக்கிறது.
திருவலஞ்சுழி பலகணி,
திருவீழிமழலை வௌவால்நத்தி
மண்டபம், ஆவுடையார்கோயில்
ஆத்மநாதசுவாமி கோயில்
கொடுங்கை போன்ற
கட்டிடப்பணி தவிர்த்து
பிற வகையிலான
கட்டட அமைப்புகளை
கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள்
உறுதி கூறுவதாகக்
கூறுவதுண்டு. இதன்மூலமாக
கட்டிடக்கலை நுட்பத்தை
உணர முடியும்.
திருவலஞ்சுழி பலகணி
(சன்னல்)
மிகவும் நேர்த்தியாகவும்
நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.
திருவீழிமிழலை வௌவால்நத்தி
மண்டபத்தில் வௌவால்களால்
தொங்க முடியாது.
ஆவுடையார்கோயில் கொடுங்கை
மிகவும் மெல்லியதாக
இருக்கும்.
இந்தக் கோவிலை
பார்க்கவில்லை என்றால்
ஒரு மனிதனுக்கு
வாழ்நாள் முற்றுப்
பெறாது.
எனது ஆசை
நிறைவேறியது மாணிக்கவாசகர்
ஞானம் பெற்ற
ஸ்தலத்தை பார்க்கும்
பாக்கியம் பெற்றேன்.
2. கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர்
கங்கைகொண்ட சோழபுரம்
முதலாம் இராஜராஜசோழன்
ஆட்சியில் கட்டப்பட்ட
கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள
மிகப்பெரிய கங்கைகொண்டசோழீச்சரர்
கோவில் , அரியலூர்
பகுதியில் மிகச்சிறந்த
ஒன்றாகும். கி.பி
1023 இல்,
கங்கை சமவெளியை
வெற்றி கொண்ட
பின்னர் முதலாம்
இராஜேந்திர சோழனால்,
கங்கைகொண்டசோழபுரம் எனும்
நகரமும் கங்கைகொண்டசோழீச்சரம்
எனும் சிவன்
கோவிலும் சோழ
கங்கம் எனும்
ஏரியும் வெற்றியின்
நினைவாக அமைக்கப்பட்டது.
இதை கோவில்
என்று சொல்வதை
விட கட்டிடக்கலையின்
உச்சம் என்று
கூறலாம்.
அருமையான சிற்பங்கள் வேலைப்பாடுகள் கோபுரங்கள் என கலை விளையாடும் ஒரு கோவில்.
Stay at Chidambaram
13 ஏப்ரல் 2023
1. சிதம்பரம் நடராஜர் கோவில் கடலூர் மாவட்டம்
சிவ ஸ்தலங்களின்
ராஜா என்று
இந்த கோவிலை
அழைக்கலாம்.
அந்தணர்களால் பராமரிக்கப்படும் ஒரு அருமையான சிவஸ்தலம் தேவாரம் முதலிய திருமுறைகளை சைவத்திற்கு அளித்த இடம்.
கிட்டத்தட்ட 45 நிமிடங்கள்
நடராஜரின் முன்னாள்
இருந்து தரிசனம்
செய்தது பூர்வஜென்ம
புண்ணியம் என்று
தான் சொல்ல
வேண்டும்.
சைவமும் வைணவமும்
ஒன்று கலக்கும்
விதம் நடராஜரின்
சன்னதிக்கு எதிரே
கோவிந்தராஜ பெருமாள்
சன்னதி.
அரியும் சிவனும்
ஒன்னு இது
அறியாதவன் வாயில
மண்ணு.
அப்பர் சுந்தரர்
மாணிக்கவாசகர் திருஞானசம்பந்தர்
ஆகிய அனைவராலும்
பாடல் பெற்ற
ஸ்தலம்.
ஒவ்வொரு சைவனும்
வாழ்நாளில் ஒரு
முறையாவது கண்டிப்பாக
வரவேண்டிய இடம்.
2. சீர்காழி சட்டநாதர் கோவில் மயிலாடுதுறை
மாவட்டம்
திருஞானசம்பந்தர் ஞானப்பால்
குடித்த இடம்
தேவாரம் பிறந்த
இடம் தோடுடைய
செவியன் என்ற
முதலாம் திருமுறை
ஆரம்பித்த இடம்
ஆறு வயதில்
திருஞானசம்பந்தர் ஞானம்
பெற்று சைவத்தை
தழைத்து ஓங்கச்
செய்த இடம்.
கீழே சட்டநாதர்
லிங்க வடிவிலும்
மேல் தளத்தில்
உருவ வடிவிலும்
அதற்கும் மேல்
தளத்தில் ஆகாச
வடிவிலும் காட்சியளிக்கும்
அருமையான ஒரு
கோவில்.
அம்மன் பெரியநாயகி
எனது ஆசை
நிறைவேறியது திருஞானசம்பந்தரின்
தரிசனம் கிடைத்தது.
சீர்காழிஅஷ்டபைரவர்
சீர்காழியில் தெற்குப் பிராகாரத்தில் வலம்புரி மண்டபம் என்ற மண்டபம் உள்ளது. இது
யோக ஸ்தானம் என்றழைக்கப்படும். இதில் எட்டு பைரவர்கள் எழுந்தருளியுள்ளனர். இவர்கள்
முறையே 1. சுதந்திரர் 2. சுயேச்சர் 3. லோகர் 4. காலர் 5. உக்ரர் 6. பிரச்யர் 7.
நிர்மாணர் 8. பீஷ்ணர் என்று அழைக்கப்படுகின்றனர்.
14 ஏப்ரல்
2023
1. திருவதிகை வீராட்டானம்... கடலூர் மாவட்டம்
பண்ருட்டிக்கு மிக
அருகே
சிவன்
வீராட்ஈஸ்வரர்
அம்மன் திரிபுரசுந்தரி
அப்பர் சுவாமிகள்
சமண மதத்திலிருந்து
சைவ மதத்திற்கு
மாறிய திருக்
கோவில்.
அப்பருக்கும் அவரது
மூத்த சகோதரி
திலகவதி அம்மையாருக்கும்
தனி சன்னதிகள்
உண்டு.
கூற்றாயினவாறு என்று
தொடங்கும் நான்காம்
திருமுறை பிறந்த
இடம்.
2. திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி மாவட்டம்
உலகளந்த பெருமாள் கோவில்
வைஷ்ணவ ஸ்தலம்
உலகளந்த பெருமாள்
மூர்த்தம் அருமையாக
உள்ளது.
தாயார் பூங்கோதை
இந்தக் கோவிலின்
கோபுரம் தமிழ்நாட்டிலே
மூன்றாவது உயரமான
கோபுரம்.
பிரம்மாண்டமான ஒரு
தலம்
15 ஏப்ரல் 2023
1. திருவெண்ணைநல்லூர் விழுப்புரம் மாவட்டம்
சிவபெருமானின் திருப்பாதம்
பதிந்த பெரும்
புனிதமான புராதனமான
திருத்தலம்.
சுந்தரமூர்த்தி நாயனாரை
இறைவன் தடுத்து
ஆட்கொண்டகொண்ட இடம்.
பித்தா
பிறைசூடி என்று
தொடங்கும் ஏழாம்
திருமுறை பிறந்த
இடம்.
சந்தான குரவரான
மெய்கண்டார், ‘சிவஞான
போதம்’ அருளிய
திருத்தலமும் இதுதான்.
சிவன் பெயர்.
கிருபாபுரீசுவரர்
அம்மன் பெயர்
மங்களாம்பிகை
இங்கு சிவன்
பெரியவர் குழுவில்
வந்ததால் அவர்
அணிந்திருந்த திருவடி
வைக்கப்பட்டுள்ளது.
சுந்தரமூர்த்தி நாயனார்
தனி சன்னதி
உள்ளது
இந்தக் கோவிலை
தரிசனம் செய்த
பின் எனது
ஆசை முழுவதாக
நிறைவேறியது.
நான்கு சமய
குறவர்களின் ஞானம்
பெற்ற ஸ்தலங்களையும்
ஒரே சுற்றில்
முடித்து விட்டேன்.
2. மெய்கண்டார் திருக்கோவில் , திருவெண்ணெய் நல்லூர்
இந்தக் கோவிலும்
சிவன் கோவிலுக்கு
மிக அருகில்
உள்ளது.
சிவஞானபோதம் சைவ
ஆகமங்களுள் முதன்மையானது.
இது ஒரு
சைவ சாஸ்திரம்.
மெய்கண்டார் தனது ஐந்து
வயதில் கடவுளின்
அருள் பெற்று
இதை உலகிற்கு
அளித்தார்
பதி பசு
பாசம் இம்மூன்றின்
தொடர்புகளை விளக்குவதே
சிவஞானபோதம்.
எங்களுக்கு சமயமாகிவிட்டதால்
உள்ளே சென்று
பார்க்க முடியவில்லை.
Back to Chennai by evening.
ஓம் நமசிவாய
.... திருச்சிற்றம்பலம்
Opening KM –
33562
Closing KM – 35150
Total run – 1588
Districts
Covered
Chennai
Chengalpet
Dindivanam
Vilupuram
Kallakurichi
Cuddalore
Ramanathapuram
Sivaganga
Nagapattinam
Pudukottai
Trichirapalli
Mayiladuthurai
Ariyalur
Thanjavur
Tiruvannamalai
Tips for travel:
1. Take less luggage, don’t carry too
many dresses, wash and dry in the night.
2. Carry a kettle and some coffee tea
sugar - if you are desperate of morning coffee.
3. Carry your and family ID cards,
always.
4. Carry the necessary medicines, and
some light snacks.
5. Carrying mobiles inside some temples
are banned, google before you go.
6. Carry swimsuits as you can enjoy sea
and river swimming as and when you get a chance.
7. Medicines are must to carry and
drink enough water during travel
8. Carry as much as change (10s and
20s) which will be useful inside temples.
9. Eat less and preferably vegetarian.
10. Finally wear good sandal or shoe and
carry some socks while walking inside temple during peak summer.
11. Take as many videos as possible
instead of photos because short videos are more enjoyable.
12. Carry some sip lock covers, and
foldable bags.
13. Avoid self-driving on nights
14. Carry some bedspreads and more hand
towels for hygiene.
15. Finally, enjoy the trip and don’t
tighten the purse………
Avoid driving in nights.. its not safe..
Do not drink and drive
Follow safety rules
Google Maps
https://goo.gl/maps/FQZcDP6mpvFVqACo8
Any query feel free to mail me at vsathyamurthy@gmail.com
Comments
Post a Comment